» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சனி 7, மார்ச் 2026 5:37:23 PM (IST)
வங்க ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார். இதையடுத்து, கேரளா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.தர்மாதிகாரி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவர், புதிதாகப் பதவியேற்ற சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். பின்னர் அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் மேற்கு வங்க ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டமெல்லாம் குடும்பமாகாது, திராவிடக் குடும்பமே நிலையானது: விஜய் மீது கமல்ஹாசன் விமர்சனம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:59:09 AM (IST)

ஏப். 17 முதல் கோடை விடுமுறை: மாணவர்கள், பெற்றோர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:14:02 AM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா நகல் எரிப்பு : கருப்பு உடை அணிந்து முதல்வர் போராட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:03:22 AM (IST)

தவெக வேட்பாளர் பிரசாரத்தில் ரகளை: அஜிதா ஆக்னல் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 10:50:05 AM (IST)

தமிழகத்தைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:03:53 AM (IST)

அண்ணாமலை ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!
வியாழன் 16, ஏப்ரல் 2026 7:53:19 AM (IST)

