» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால் வீட்டில் அனுமதி மறுப்பு: விஜய் மீது சங்கீதா புதிய புகார்
சனி 7, மார்ச் 2026 4:36:03 PM (IST)
விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால், தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுப்பதாக தவெக தலைவர் விஜய் மீது சங்கீதா புகார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சங்கீதா தரப்பில் தற்போது புதிய இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுவில் சங்கீதா கூறியுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்: தன்னிடம் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால், நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் எனத் தனது வழக்கறிஞர் மூலமாக விஜய் கூறியதாகச் சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார்.
தான் பிரிட்டன் குடியுரிமை பெற்று லண்டனில் வசித்து வருவதாகவும், சென்னையில் தமக்கு எனத் தனியாக வீடு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து வழக்கு முடியும் வரை அல்லது மாற்று இடம் அமையும் வரை, நீலாங்கரை இல்லத்திலேயே தங்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
சென்னை நீலாங்கரை வீட்டில் தனக்கும் சரிபாதி பங்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள சங்கீதா, தமக்கும் குழந்தைகளுக்கும் சட்டப்படி கிடைக்க வேண்டிய முறையான ஜீவனாம்சத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பலமுறை சுமுகமாகப் பிரிய முயன்றும், விஜய் அதற்கு ஒத்துழைக்கவில்லை எனத் தனது மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து மனுவில், சில தனிப்பட்ட காரணங்களைச் சங்கீதா முன்வைத்திருந்தார். இந்நிலையில், இந்த புதிய மனுவின் மீதான விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது. வரும் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில், விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டமெல்லாம் குடும்பமாகாது, திராவிடக் குடும்பமே நிலையானது: விஜய் மீது கமல்ஹாசன் விமர்சனம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:59:09 AM (IST)

ஏப். 17 முதல் கோடை விடுமுறை: மாணவர்கள், பெற்றோர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:14:02 AM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா நகல் எரிப்பு : கருப்பு உடை அணிந்து முதல்வர் போராட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:03:22 AM (IST)

தவெக வேட்பாளர் பிரசாரத்தில் ரகளை: அஜிதா ஆக்னல் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 10:50:05 AM (IST)

தமிழகத்தைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:03:53 AM (IST)

அண்ணாமலை ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!
வியாழன் 16, ஏப்ரல் 2026 7:53:19 AM (IST)

