» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, பிப்ரவரி 2026 9:06:08 PM (IST)
14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (26). இவர் கடந்த 2024-ம் ஆண்டு, 14 வயது சிறுமி ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நாசரேத் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரைக் கைது செய்தனர்.இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி (பொறுப்பு) பிரீத்தா அவர்கள், இன்று (23.02.2026) தீர்ப்பினை வழங்கினார். குற்றவாளி ஜெயக்குமாருக்கு பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை ரூ.10,000 அபராதமும் மற்றும் கடத்தல் குற்றத்திற்காக 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் ஜீன்குமார், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரேவதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய மேம்பாலங்கள் : முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 5:14:13 PM (IST)

நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:31:47 PM (IST)

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 1 முதல் 15 வரை தாம்பரத்தில் நிறுத்தம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 26, பிப்ரவரி 2026 10:56:40 AM (IST)

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26.50 லட்சம் மோசடி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 25, பிப்ரவரி 2026 9:23:53 PM (IST)

ரயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:22:12 PM (IST)

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்தது தனியார் பால் விலை: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!
புதன் 25, பிப்ரவரி 2026 5:16:51 PM (IST)

