» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)



திருநெல்வேலியில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திருநெல்வேலியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில், தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சாராள் தக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான நுழைவாயிலை திறந்து வைத்தார். 

இவ்விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு,  அமைச்சர் பெருமக்கள் - கே.என். நேரு,  எ.வ. வேலு,  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,  தங்கம் தென்னரசு, பி. கீதா ஜீவன்,  அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,  த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கனிமொழி,  பி. வில்சன்,  ராபர்ட் புரூஸ்,டாக்டர் ராணி ஸ்ரீகுமார், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ்,  அப்துல் வகாப்,  ரூபி மனோகரன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை முன்னாள் தலைவர்  ஆவுடையப்பன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்  பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்துவ தேவாலயங்களின் தலைமை போதகர்கள், கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory