» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டி : தூத்துக்குடி கிரெசென்ட் பள்ளிக்கு தங்கப்பதக்கம்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 3:11:05 PM (IST)

மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டியில் தூத்துக்குடி கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
திருச்சி தொட்டியம் கல்லூரியில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் வைத்து நடைபெற்றது. 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்து அரையிறுதி போட்டியில் தூத்துக்குடி கிரசன்ட் மேல்நிலைப் பள்ளியும்தேனி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணியும் பங்கு பெற்றன. இதில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிராண்ட் பள்ளி பின்பு நடைபெற்ற இறுதிப் போட்டியில் விருதுநகர் மாவட்ட அணியை எதிர்கொண்டது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தூத்துக்குடி கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி 65க்கு 45 என்ற புள்ளி கணக்கில் விருதுநகர் மாவட்ட அணியை தோற்கடித்து மாநில அளவிலான குடியரசு தின போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது. மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் 17 வயது குட்பட்ட மாணவர் பிரிவில் தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. அந்த சிறப்பு தூத்துக்குடி கிரசன்ட் மேல்நிலைப்பள்ளிக்கு கிடைத்துள்ளது.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை கிரசன்ட் மேல்நிலைப் பள்ளியின் கூடைப்பந்து பயிற்சியாளர் பிரதீப், கிரசென்ட் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மும்தாஜ் பேகம், மாவட்ட கூடை பந்து கழக தலைவர் விவிடி பிரம்மானந்தம், செயலாளர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் ராஜ்குமார், பயிற்சியாளர் ஆனந்த், மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தினராஜ் ஆகியோர் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 8:29:15 PM (IST)

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா? விஜய்க்கு எதிராக பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:41:34 PM (IST)

விஜயை மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் : ஈரோடு பிரசாரத்தில் விஜய் பேச்சு
வியாழன் 18, டிசம்பர் 2025 12:30:15 PM (IST)

தமிழகத்தில் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிப்பு : பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:54:37 AM (IST)

முன்புபோல் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 5:42:27 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)


.gif)