» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா? விஜய்க்கு எதிராக பரபரப்பு போஸ்டர்!

வியாழன் 18, டிசம்பர் 2025 12:41:34 PM (IST)



ஈரோட்டில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பல்வேறு கேள்விகள் எழுப்பி நகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான பிறகு, தமிழகத்தில் முதல்முறையாக விஜயமங்கலம் அருகே திறந்தவெளி பிரசாரக் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்துக்கு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டர்களில் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் நலம்விசாரிக்காததற்கு எதிராக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. "ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா??”, "இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? வாட் ப்ரோ இட்ஸ் வெறி ராங் ப்ரோ (What bro it's very wrong bro)" உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory