» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜயை மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் : ஈரோடு பிரசாரத்தில் விஜய் பேச்சு
வியாழன் 18, டிசம்பர் 2025 12:30:15 PM (IST)

கிட்டத்தட்ட 33 வருடத்திற்கு மேல் இருக்குற உறவு. இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் என்று ஈரோடு பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் நின்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது: மஞ்சள்... மஞ்சள்... பொதுவாக நல்ல காரியம் செய்வதற்கு முன்னாடி மஞ்சள் எடுத்து வைத்து தான் ஆரம்பிப்பார்கள்.
நம் வீட்டில் கூட அம்மாக்கள், சகோதரிகள் நமக்காக நாம் நல்லா இருக்கணும் என்பதற்காக மஞ்சள் நிற புடவையை கட்டி வேண்டிப்பாங்க. நம் கொடியில் கூட அந்த எனர்ஜெட்டிக்கான வைப் மஞ்சள் இருக்கும். அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளையுற பூமிதான் இந்த ஈரோடு பூமி. இங்க வந்து மஞ்சள் பற்றி பேசாம வேறு எங்க போய் பேசுறது.
அதுமட்டுமல்ல.. இங்க ஒரு மகத்தான மனிதரைப் பற்றி பேசி ஆகணும். இந்த ஈரோடு மண். விவசாயத்துக்கும் பெயர் போன மண். இங்க நடக்கிற அந்த விவசாயத்துக்கு மிக முக்கிய கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை. காலிங்கராயன் கால்வாய்.
காலிங்கராயன் அணை கட்டும் போதும் கால்வாய் வெட்டும்போதும், ரொம்ப சோர்வடைந்தாராம். அப்போது அவரது தாய் பார்த்து சொன்னாராம். மகனே கலிங்கா.. தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரைக்கும் இருக்கு.. மோர் விற்ற காசு முகடம் வரைக்கும் இருக்கு. அதை எடுத்துப்போட்டு போய் கால்வாய் வெட்டுரான் என்று தைரியம் கொடுத்தார்கள்.
பெற்ற தாய் கொடுக்குற அந்த தைரியத்தை தாண்டி வேற எதுவும் கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்து காட்டமுடியும். அப்படி ஒரு தையரித்தை தான் நீங்கள்... என்னுடைய அம்மா, அப்பா, சகோதரிகள், நண்பிகள், தோழிகள் என எல்லாரும் எனக்கு கொடுத்து இருக்கீங்க.
இதை எப்படி கெடுக்கலாம்.. என்னவெல்லாம் அவதூறு விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம். இப்படி சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துற சில சூழ்ச்சிக்கார கூட்டம் இதைச் செஞ்சிட்டுத்தான் இருக்கு. ஆனா அவங்களுக்கு தெரியாது.. இது இன்னிக்கு, நேத்து வந்த உறவு இல்ல.. கிட்டத்தட்ட 33 வருடத்திற்கு மேல் இருக்குற உறவு. இந்த விஜயை.. இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் பிறந்த தந்தை பெரியார்தான் இந்தியாவுக்கே இடஒதுக்கீடு சட்டம் நடத்துவதற்காக போராட்டம் நடத்தினார். பெரியாரிடம் இருந்து கொள்கையையும், அவரை பின்பற்றிய அண்ணாவும், எம்ஜிஆரின் தேர்தல் குறிக்கோளை எடுத்துக் கொண்டோம். அவர்கள் பெயரை பயன்படுத்தக் கூடாதென்று யாரும் கூற முடியாது. உங்களுக்கு தவெக ஒரு பொருட்டே இல்லையெனில், ஏன் கதறுகிறீர்கள்.
எங்களுக்கு பயம் இல்லையென்று, சின்ன குழந்தைகள் நடுங்கிக் கொண்டு நடந்து சொல்வது போல் உள்ளது. முதலில் மண்டையில் இருக்கும் கொண்டையை மறையுங்கள். பெரியார் பெயரைச் சொல்லி தயவுசெய்து கொள்ளையடிக்காதீர்கள் என்று பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 8:29:15 PM (IST)

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா? விஜய்க்கு எதிராக பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:41:34 PM (IST)

தமிழகத்தில் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிப்பு : பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:54:37 AM (IST)

முன்புபோல் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 5:42:27 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)


.gif)