» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளையரசனேந்தல் பிர்கா விவகாரத்தில் அரசாணை ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

வியாழன் 30, அக்டோபர் 2025 10:31:27 AM (IST)

இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இருந்த போதிலும் ஊராக வளர்ச்சி துறை மட்டும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து வந்தது. 

தென்காசி மாவட்டம் பிரிப்பதற்கு முன்பு நெல்லை மாவட்டத்துடன் இருந்து வந்தது. 01.09.2017ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளின் ஊராக வளர்ச்சி துறை தென்காசி மாவட்டத்துடன் தொடரும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. 

இதற்கிடையில் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணை ரத்து செய்ய கோரி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் நாராயண சுவாமி, தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் ஆகியோர் தலைமையான பெஞ்ச் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டுமென்ற அரசாணை ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளனர் 

இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க ஏற்கனவே கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுப்பட்டுள்ளதாகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துறை இயக்குனருக்கு இது அனுப்பப்பட்டு இருப்பதாகவும், மூன்று மாதங்களுக்குள் உத்தரவுகள் நிறைவேற்றப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

17 ஆண்டுகளுக்கு மேலாக போராடிவரும் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory