» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

வியாழன் 30, அக்டோபர் 2025 12:03:17 PM (IST)



மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நான்கு நாள்கள் பயணமாக கடந்த தமிழகம் வந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை, திருப்பூர் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

தமிழக அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். மேலும், பாஜக முக்கிய நிர்வாகிகள், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோரும் அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சி.பி. ராதாகிருஷ்ணன் தரிசனம் மேற்கொண்டார். 

பின்னர், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் இன்று (அக். 30) நடைபெறும் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக, மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில், மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்! என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory