» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (15.09.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.900 மதிப்பிலான பிரெய்லி வாட்ச், கண்ணாடி, மடக்கு குச்சிகள் 8 பயனாளிகளுக்கு, தலா ரூ.13,500 மதிப்பிலான வீல் சேர்கள் 2 பயனாளிகளுக்கும், ரூ.8500/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் ஒரு பயனாளிக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.6690/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகள் 6 பயனாளிகளுக்கும் ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் அரசு அலுவலர்களுக்கான நடைபெற்ற தடகளம், செஸ், வாலிபால், இறகுப்பந்து, கபாடி, கேரம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும், சிறு சேமிப்புத்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த முகவர்களுக்கு முதல் பரிசுத்தொகையாக ரூ.3 ஆயிரம் மற்றும் கேடயமும் 2 நபர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் 2 நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.1000-மும் 30 நபர்களுக்கும் பரிசுத்தொகை மற்றம் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு : அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:08:34 PM (IST)

குலசை தசரா பக்தர்களுக்கு திமுக பிரமுகர் இடையூறு - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 3:12:08 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது: விஜயை விமர்சித்த சீமான்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:07:44 PM (IST)

மரக்கடையில் விஜய் பிரசாரத்தால் ரூ.1¼ லட்சம் சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:00:41 PM (IST)

ஒழுக்கத்துடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் : மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:19:25 AM (IST)

மத்திய பா.ஜனதா அரசு நெடுநாள் நீடிக்காது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:49:10 AM (IST)
