» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது: விஜயை விமர்சித்த சீமான்!

திங்கள் 15, செப்டம்பர் 2025 12:07:44 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது என்று கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். 

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தனது கரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் உதறிவிட்டு அரசியலுக்கு வந்ததாக விஜய் தெரிவித்தார். இந்நிலையில், கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் த.வெ.க. தலைவர் விஜயை ஒருமையில் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டத்தில் பேசிய சீமான், "என்னுடைய தம்பியை கரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொன்னது யார்? உன் வீட்டு வாசல்ல எவன்டா நின்னான்..? நீ வா என்று யாரும் கூப்பிடவில்லையே, எதுக்கு வர்ற? அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை.

தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது. தமிழ், தமிழர்கள், தமிழர்கள் உரிமை, வளங்கள் என்ற ஒரு வார்த்தையாவது விஜய் பேசியது உண்டா? அனைவரும் ஒன்று என்றால் கட்சியை ஆந்திராவில் ஆரம்பிக்க வேண்டியது தானே?.

ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எம்ஜிஆர் எழுதி வைக்காமல் பேசுவார். விஜயகாந்த் மக்களின் மொழியிலேயே பேசுவார். அய்யா ஸ்டாலின் கூட சின்ன சீட்டில் எழுதி வைத்து தான் பேசுவார். என் தம்பியும் எடப்பாடியும் முழு சீட்டு வைத்து பேசுவார்கள். இவரால் மழையில் பேசமுடியாது காகிதம் நனைந்திடும்" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory