» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 7பேர் உயிரிழப்பு

செவ்வாய் 1, ஜூலை 2025 11:59:03 AM (IST)

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த கமலேஷ் என்பவருக்குச் சொந்தமான கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 

இந்த வெடிவிபத்தில் 2 பெண்கள் 3 ஆண்கள் என 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள 5 அறைகள் தரைமட்டமாகின. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.  ஆலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலையின் போர்மேன் ஒருவரை கைது செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory