» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கும் போலீசார் ‍: அதிர்ச்சி வீடியோ வெளியானது!

செவ்வாய் 1, ஜூலை 2025 3:23:07 PM (IST)

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமாரை போலீசார் ‍அடித்து துன்புறுத்தும் கொடூரக் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமாரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து துன்புறுத்தும் கொடூரக் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை என்ற பெயரில் பத்திரகாளியம்மன் கோவில் கோ சாலைக்குள் வைத்து நகை கேட்டு பிரம்பால் தாக்குகின்றனர்.

போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்ததாக FIR-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித்குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இதனிடையே, வீடியோ காட்சிகளை வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory