» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் இளையராஜா : முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
திங்கள் 2, ஜூன் 2025 12:10:55 PM (IST)

தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று (ஜூன் 2) பிறந்தநாள். இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இளையராஜாவை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு, முதல்வர் தனது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி!!
புதன் 4, ஜூன் 2025 5:11:17 PM (IST)

அச்சிட்ட காகிதங்களில் உணவு வழங்கக் கூடாது: உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 5:02:16 PM (IST)

மனுஷி படத்தின் ஆட்சேபனை காட்சிகள்: சென்சார் போர்டு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 4:44:14 PM (IST)

குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு சீருடைகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
புதன் 4, ஜூன் 2025 4:19:00 PM (IST)

கமல் நடித்துள்ள தக் லைஃப் நாளை ரிலீஸ்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
புதன் 4, ஜூன் 2025 12:31:02 PM (IST)

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி: கனிமொழியை பாராட்டிய முதல்வர்!
புதன் 4, ஜூன் 2025 12:16:49 PM (IST)
