» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆபரேஷன் சிந்தூர் விளக்க பயணம்: சென்னை திரும்பிய கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு!
புதன் 4, ஜூன் 2025 11:34:15 AM (IST)

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய கனிமொழி எம்பிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து, தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளிடம் விளக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு நாடுகளுக்கு இந்திய எம்பிக்கள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்தது.
அதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி தலைமையில் ஒரு குழுவினர் ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் கனிமொழி எம்பி தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு, ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் பெருமளவு கூடி கனிமொழி எம்பிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் கனிமொழி விமான நிலையத்தில் இருந்து, வெளியில் வந்து காரில் ஏறுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து, கனிமொழியை வெளியே அழைத்து வந்து, காரில் அனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)


.gif)