» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாடகை கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!
வெள்ளி 29, நவம்பர் 2024 5:47:56 PM (IST)
வாடகை கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதித்து பெரும் சுமையை வணிகர்கள் தலையில் ஏற்றும் மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள், கடை வாடகை தொகையில் 18 சதவிகிதத்தை ஜி.எஸ்.டி வரியாக மாதந்தோறும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வாடகைக் கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட சரிவில் இருந்து வணிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்ற இந்த வேளையில், வாடகை கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி எனும் பெரும் சுமையை அவர்கள் தலையில் ஏற்றும் ஒன்றிய அரசுக்கு எனது கடும் கண்டனம். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த வாடகைக் கட்டடங்களுக்கான 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசையும் , உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 20-ல் வெளியாகிறது 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
திங்கள் 18, மே 2026 12:53:24 PM (IST)

மே 21-ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 18, மே 2026 11:16:08 AM (IST)

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளனர்! - மு.க.ஸ்டாலின் பேச்சு!
திங்கள் 18, மே 2026 10:46:00 AM (IST)

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்!
திங்கள் 18, மே 2026 10:35:35 AM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

எடப்பாடியாருக்கு தூத்துக்குடி அதிமுக முழு ஆதரவு: எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தீர்மானம்!
திங்கள் 18, மே 2026 10:11:13 AM (IST)


