» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் : முதல்வர் தொடங்கி வைத்தார்!

வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 12:46:04 PM (IST)



உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 9) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்றிட, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்து, விழாப்பேருரை ஆற்றினார். தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு, கீதா ஜீவன், அன்பில் மகேஷ், முத்துசாமி உள்ளிட்டோர் மற்றும் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஏற்கெனவே மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலமாக, அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் 3.28 லட்சம் மாணவா்கள் பயன் பெற உள்ளனர். 

தமிழ்ப் புதல்வன் எனும் பெயரிலான திட்டமானது, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களின் உயா் கல்விச் சோ்க்கையை அதிகரிக்க வகுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7.72 லட்சம் மாணவா்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கிறாா்கள். அவா்களில் கல்லூரிகளில் சோ்ந்து பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிகவும் அதிகமாகும். அவா்களுக்காக தமிழ்ப் புதல்வன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, 3.28 லட்சம் மாணவா்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவா்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை வாங்கி உயா் கல்வியை மெருகேற்ற உதவும் வகையில் ரூ.1,000 அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory