» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

வியாழன் 8, ஜனவரி 2026 12:31:19 PM (IST)

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. இதற்கிடையே சமீபத்தில் புதுக்கோட்டை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அமித்ஷாவை சென்று சந்திக்கவில்லை. அவருக்கு பதிலாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 முறை சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது, சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் பட்டியலை பெயர்கள் குறிப்பிட்டு அமித்ஷா வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், தொகுதிகளின் எண்ணிக்கையும் 50-க்கும் மேல் பட்டியலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. முக்கியமாக, தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் டெல்லி திரும்பிய நிலையில், நேற்று இரவு அங்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இன்று காலை தமிழகம் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, அவரிடம் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் வரும். அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. சேரும்போது உங்களை அழைத்து சொல்வோம். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

JAY JY JAYJan 8, 2026 - 02:30:42 PM | Posted IP 104.2*****

இந்த டயர் நக்கியை சேர்க்கவேண்டாம். அதிமுகவை விடியலிடம் விற்று விடுவார்.மிகப்பெரிய சுயநலவாதி, பதவிக்காக விடியல் தலைவர்கள் கார் டயரை கூட கும்பிடுவார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory