» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜன நாயகன் விவகாரத்தில் பாஜக நெருக்கடி கொடுத்ததா? எச். ராஜா மறுப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:30:29 PM (IST)
பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால், இன்று விஜய் வெளியில் வந்திருக்க முடியாது என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுடன் எச். ராஜா பேசுகையில் "காங்கிரஸ் ஆட்சியில் சிபிஐ என்பது காங்கிரஸ் புலனாய்வு மையமாக இருந்தது. திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இருந்தபோதே, ஆ. ராசாவையும் கனிமொழியையும் சிறையில் அடைத்தனர். அவர்கள் எப்போதும் கத்தியை முதுகில் வைத்துக்கொண்டு பேரம் பேசுபவர்கள்.
பாஜக அரசு அதிகாரத்தை அரசியல் காரணங்களுக்காகப் ஒருபோதும் பயன்படுத்தாது.நாங்கள் (பாஜக) நெருக்கடி கொடுக்க வேண்டுமென்றால், செப். 27-லிலேயே கொடுத்திருப்போம். ஆனால், மனிதாபிமானத்தோடுதான் மத்திய பாஜக அரசு செயல்பட்டது. பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால், இன்று விஜய் வெளியில் வந்திருக்க முடியாது. ஒருவரின் பலவீனத்தை கையிலெடுத்து, பாஜக ஒருபோதும் நெருக்கடி கொடுக்காது" என்று தெரிவித்தார்.
மேலும், நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் ஹிந்தி எதிர்ப்பு குறித்தும் எச். ராஜா பேசுகையில் "ஹிந்தி எதிர்ப்பு ஸ்டாலின் குடும்பத்தில் இருக்கிறதா? அவர்களின் குடும்பம் நடத்திவரும் சன் சைன் பள்ளியில் ஹிந்தி, சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கின்றனர்.
ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்ட 40 திமுக தலைவர்களின் குடும்பத்தினர் பள்ளிகள் நடத்தி வருகின்றனர். இவையெல்லாம் ஹிந்தி, சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கும் சிபிஎஸ்சி பள்ளிகள். திமுகவிலேயே ஹிந்தி எதிர்ப்பு எடுபடவில்லை; தமிழக மக்களிடம் எப்படி எடுபடும்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ்: வழக்கு விசாரணை ஜன.21க்கு தள்ளி வைப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 5:21:19 PM (IST)

ஆதார்,ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்க முடிவு: விவசாயிகள் அறிவிப்பு!
வெள்ளி 9, ஜனவரி 2026 5:08:32 PM (IST)

ஜன.10, 11ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைப்பு: விஜய் அறிவிப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 4:19:26 PM (IST)

தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
வெள்ளி 9, ஜனவரி 2026 4:08:09 PM (IST)

தமிழ்நாட்டிற்கு முக்கியமான தேர்தல்; திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது : அன்புமணி பேச்சு
வெள்ளி 9, ஜனவரி 2026 12:55:23 PM (IST)

