» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கடலில் பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகை மீட்பு!
திங்கள் 24, ஜூன் 2024 8:14:44 AM (IST)

திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஜோதி. இவர்கள் குடும்பத்தினருடன் நேற்று அதிகாலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் ஜோதி குடும்பத்துடன் கடலில் புனித நீராடினார். அப்போது ஜோதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி கடலில் தவறி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அங்கிருந்த புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இது குறித்து கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று காலை 8 மணி முதல் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் சிற்பி அரிக்கும் தொழிலாளர்கள் 50 பேர் கடலில் நகையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் கழித்து வேலுச்சாமி என்பவர் கடலில் தங்கச் சங்கிலியை கண்டுபிடித்தார்.
உடனடியாக கடற்கரை பாதுகாப்பு பணியாளர் சிவராஜா தலைமையில் அந்தநகை புறக்காவல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், தங்க சங்கிலியை தவறவிட்ட ஜோதியிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு ஜோதி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி-மைசூர் இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:38:08 PM (IST)

ஜன நாயகன் விவகாரத்தில் பாஜக நெருக்கடி கொடுத்ததா? எச். ராஜா மறுப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:30:29 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் ஐக்கியம்!
வியாழன் 8, ஜனவரி 2026 5:54:09 PM (IST)

தூத்துக்குடியில் போலி ஐபோன் உதிரிபாகங்கள் விற்பனை : போலீசார் அதிரடி சோதனை!
வியாழன் 8, ஜனவரி 2026 3:43:14 PM (IST)

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:31:19 PM (IST)

நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இடிப்பு: இந்து முன்னணி குற்றச்சாட்டு!
வியாழன் 8, ஜனவரி 2026 12:14:32 PM (IST)

