» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிக்கு அறிவியல் இன்ஸ்பயர் விருது

சனி 4, பிப்ரவரி 2023 5:41:07 PM (IST)தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மதுபாலா அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்றார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் இன்ஸ்பயர் விருதுக்கான போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

இப் போட்டிகளில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி   மாணவி மதுபாலா காலணிகளில் இருந்து மொபைல் சார்ஜிங் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார். இதில் மாணவி மதுபாலா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில் சான்றிதழ்களும், ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும், அறிவியல் இன்ஸ்பயர் விருதும் மாணவி மதுபாலாவிற்கு வழங்கப்பட்டன.

அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்ற மாணவி மதுபாலாவை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, பள்ளி இயக்குநரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமை ஆசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமை ஆசிரியை சுப்பமாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory