» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் கடத்திய 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
வெள்ளி 1, ஜூலை 2022 11:50:55 AM (IST)
தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் கடத்தல் வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 04.06.2022 அன்று ஜார்ஜ் ரோடு இந்திரா நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா எண்ணெய் வைத்திருந்த வழக்கில் ஜார்ஜ் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மோகன் மகன் ஆனந்தகுமார் (32), ராஜேந்திரன் மகன் சார்லஸ் (32) மற்றும் மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் படையப்பா (எ) அருண்குமார் (28) ஆகிய 3 பேரையும் தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் கைதான மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆணையினை தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் இராஜாராம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார். இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 31 பேர் உட்பட 127 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மரியாதை!
ஞாயிறு 28, டிசம்பர் 2025 1:35:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து 219 மாணவ-மாணவிகளை கீழடிக்கு அழைத்து சென்ற கனிமொழி எம்.பி.
ஞாயிறு 28, டிசம்பர் 2025 10:52:57 AM (IST)

பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.15 லட்சம் இழந்ததால் டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை!
ஞாயிறு 28, டிசம்பர் 2025 10:42:09 AM (IST)

வலுவான எதிரிகள் இருந்தால்தான் எதிர்க்க முடியும்: ஜனநாயகன் விழாவில் விஜய் பேச்சு
ஞாயிறு 28, டிசம்பர் 2025 9:03:11 AM (IST)

திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் சுகுமார் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 5:23:34 PM (IST)

என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்
சனி 27, டிசம்பர் 2025 5:16:14 PM (IST)



.gif)