» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உங்கள் செயல் ஏற்புடையதாக இல்லை: ஓ. பன்னீர் செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
வியாழன் 30, ஜூன் 2022 5:04:05 PM (IST)
"கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல" என்று அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கட்சியின் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர்.
4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்த கடிதம் ஏற்புடையதாக இல்லை. அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கட்சியின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான படிவங்களை கையெழுத்திட அனுப்பி வைக்குமாறு எடப்பாடி பழனிசாக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 4:43:38 PM (IST)

தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ்களில் தாறுமாறாக கட்டணம் உயர்வு
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 4:29:28 PM (IST)

நிலத்தில் பதிக்கப்பட்ட எரிவாயு குழாய் வெடித்து சிதறியது ... கோவை அருகே பரபரப்பு!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 3:41:05 PM (IST)

தூத்துக்குடியில் மூவர்ணத்தில் மண்பாண்டங்கள் விற்பனை : அசத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர்
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:28:21 PM (IST)

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு பரோட்டா: மாற்றி யோசித்த நெல்லை இளைஞர்கள்!!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:05:10 PM (IST)

உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 11:46:25 AM (IST)

JAY RASIGANJul 1, 2022 - 04:12:27 PM | Posted IP 162.1*****