» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

செவ்வாய் 25, ஜனவரி 2022 11:53:53 AM (IST)

எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டடர் செய்தியில் கூறியிருப்பதாவது: ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி  எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

புரட்சித் தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும், இத்தகைய விஷமச் செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory