» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

வெள்ளி 3, டிசம்பர் 2021 5:31:39 PM (IST)

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகிற 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி "அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுகவை கேட்காமல் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது, அதேநேரத்தில் தேர்தலில் சட்ட விதிமீறல் இருந்தால் தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்யும் என்று நீதிபதி தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.  


மக்கள் கருத்து

RAJUDec 4, 2021 - 02:51:11 PM | Posted IP 162.1*****

EPS IS ONLY LEADER AND C.M CANDIDATE IN AIADMK. REMOVE SLEEPER CELLS AND CLEAN THE AIADMK TO GET VICTORY

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory