» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9பேர் உயிரிழப்பு : 2 பேர் கைது

சனி 21, மார்ச் 2020 11:10:11 AM (IST)சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தூர் அருகே சிற்பிப்பாறையில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்  கணேசன், மேலாளர் பாலகிருஷ்ணன், மேற்பார்வையாளர்கள்குட்டி, மகேஸ்வரன், ஆலை போர்மேன் மதியழகன் உள்ளிட்ட 6 பேர் மீது  கவனக்குறைவாக வெடிபொருட்களை கையாண்டது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்பட்டு விபத்து ஏற்படுத்தியது. 

மரணம் ஏற்படும் வகையில் குற்றம் புரிந்தது  உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் ஆலையின் போர்மேன் மதியழகன் மற்றும் மேற்பார்வையாளர் மகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆலை உரிமையாளர் கணேசன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory