» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஞாயிறு 19, ஜனவரி 2020 1:00:49 PM (IST)

தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கி ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறும். அதன் பின்னர் ஐயப்ப சீசன் துவங்கி விடும். கடந்த ஆண்டு சீசன் குறிப்பிட்ட காலத்தில் துவங்கவில்லை. காலதாமதமாக சீசன் துவங்கியது. ஆனால் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து இன்று வரை விழுகிறது. இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் இருந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைய துவங்கியது. காணும் பொங்கல் அன்று குற்றாலம் வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் விழுந்த குறைந்தளவு தண்ணீரில் குளித்து ஆறுதல் அடைந்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் திடீர் என குற்றாலம் மலைப்பகுதியில் மழை பெய்தது. இரவும் இம்மழை நீடித்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டுக் கொண்டு தண்ணீர் கொட்டியது. பழையகுற்றால அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் குளித்தனர். விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் சற்று அதிகமாகவே காணப்பட்டது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் இல்லாமல் குளு குளு நிலைமை நீடித்ததால் சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சி மேலும் அதிகரித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory