» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேஸ்புக் அடிமையான மனைவி வெட்டிக் கொலை : நாடகமாடிய கணவர் கைது

செவ்வாய் 25, ஜூன் 2019 11:36:36 AM (IST)நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே நீண்ட நேரம் பேஸ்புக் சாட்டிங் செய்து கொண்டிருந்த மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். 

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே வியாழக்கிழமை மாலை நேரம் வீட்டில் தனியாக இருந்த கோமதி நாயகம் என்பவரது மனைவி முத்துமாரி அரிவாளால் வெட்டப்பட்டு சடலமாக கிடந்தார். மனைவி கொலை செய்யப்பட்டு விட்டதாக கூறி கோமதி நாயகம் தெரிவித்துள்ளார். முத்துமாரியின் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

கைரேகை நிபுணர்கள் மூலம் கிடைத்த கைரேகைகளின் அடிப்படையில் கோமதி நாயகத்தின் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. கடந்த 2 நாட்களாக கோமதி நாயகத்திடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கோமதி நாயகம் மனைவி விருப்பபட்டு கேட்டதால் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதில் இணையதள சேவையை பயன்படுத்தி வந்த முத்துமாரி எப்போதும் பேஸ்புக்கில் மூழ்கிகிடந்ததாக கூறப்படுகிறது.
 
மனைவியின் இந்த செயல் கோமதி நாயகத்துக்கு சந்தேகத்தோடு ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பல நாட்களாக இது தொடர்பாக மனைவியிடம் சண்டையிட்டும் அவர் பேஸ்புக் பயன்படுத்துவதை தொடர்ந்ததாக கூறப்படுகின்றது.அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை போனில் நண்பர்களுடன்  சாட்டிங் செய்தபடி இருந்த முத்துமாரியை பார்த்த ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். 

யாருக்கும் முத்துமாரியின் சத்தம் கேட்காததால் கதவை சாத்திவிட்டு ஒன்றும் தெரியாதது போல வெளியில் சென்றுள்ளார் கோமதி நாயகம், பின்னர் முத்துமாரி கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்து வீட்டுக்கு வருவது போல வந்து உறவினர்களுடன் சேர்ந்து கோமதி நாயகம் கண்ணீர் விட்டு கதறி அழுது நாடகமாடியது தெரிய வந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory