» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி கடலில் அமெரிக்க வாழ் சகோதரிகள் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை
வெள்ளி 1, மே 2026 8:53:57 AM (IST)
கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வந்த அமெரிக்க வாழ் கேரள சகோதரிகள் இருவர், வாவத்துறை கடலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் கிடங்கூர் பகுதியைச் சேர்ந்த பிலிப் - மேரி தம்பதியினரின் மகள்கள் ஆனி பிலிப் (35) மற்றும் மீரா பிலிப் (32). ஆனி பிலிப் எக்ஸ்ரே டெக்னீஷியனாகவும், மீரா பிலிப் பொறியாளராகவும் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வந்தனர். விடுமுறைக்காகத் தமிழகம் வந்த இவர்கள், ராமேஸ்வரம் மற்றும் மதுரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு கடந்த 26-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வந்து விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.கடந்த 27-ஆம் தேதி விடுதியிலிருந்து வெளியே சென்ற சகோதரிகள் இருவரும் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து அவர்களது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று காலை வாவத்துறை தூண்டில் வளைவு பகுதியில் இரண்டு பெண்களின் உடல்கள் மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
கடலோரப் பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார், உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர்கள் மாயமான சகோதரிகள் ஆனி பிலிப் மற்றும் மீரா பிலிப் என்பது உறுதி செய்யப்பட்டது. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தார்களா அல்லது தற்கொலை செய்துகொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மகளிர் ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 11:49:42 AM (IST)

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)


