» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு மகளிர் ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 11:49:42 AM (IST)
நாகர்கோவில் திருமூலராமவர்ம அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2026 ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவியர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில் இயங்கி வரும் திருமூலராமவர்ம அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2026 ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவியர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவிற்கு மட்டும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்குப் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேல் எந்தவொரு பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 14 ஆண்டுகள் ஆகும்; அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
வழங்கப்படும் தொழிற்பிரிவுகள்:
இங்கு முற்றிலும் இலவசக் கட்டணத்தில் வழங்கப்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 முக்கிய தொழிற்பிரிவுகள்:
கம்மியர் மின்னணுவியல் (Electronics Mechanic)
டெஸ்க் டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர் (DTP Operator)
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டெண்ட் (COPA)
ஆடை தயாரித்தல் (Dress Making)
சுருக்கெழுத்து மற்றும் செயலக பணி உதவியாளர் - ஆங்கிலம் (Stenographer)
நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Design Technology)
மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர் (Medical Electronics)
கட்டிடக்கலை படவரைவாளர் (Draughtsman Civil)
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள மாணவிகள் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில் உள்ள திருமூலராமவர்ம அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (மகளிர்) நேரில் சென்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் இலவசமாக விண்ணப்பித்து, நேரடி சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் பயன்கள்: பயிற்சியில் சேரும் மாணவிகளுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்படுவதுடன், மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடை தையல் கூலியுடன், காலணி மற்றும் மாதந்தோறும் வருகைக்கேற்ப ரூ.750 உதவித்தொகையும், கட்டணமில்லாப் பேருந்து சலுகையும் வழங்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் மாணவிகளுக்கு அதற்கான வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். மேலும், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில்) பயின்ற மாணவிகளுக்குத் தமிழக அரசின் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு மற்றும் கூடுதல் தகுதி: பயிற்சி காலத்திலேயே முன்னணி தொழில் நிறுவனங்களில் சுயதிறன் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் (On the Job Training), பயிற்சி முடியும் முன்பாகவே 100% வளாக நேர்காணல் (Campus Interview) மூலமாக வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.
பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் 2 ஆண்டுகள் ஐடிஐ பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்கள், மொழிப்பாடங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டும் எழுதி, 12-ஆம் வகுப்புக்கு இணையான மாநில அரசின் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்கள் அறிய விரும்பும் மாணவிகள் 9499055807, 04652-222569, 9095680040, 9688333469 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)


