» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று 'பசுமை நகரம்' திட்டத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியை எழில்மிகு, தூய்மையான நகரமாக மாற்றும் நோக்கில், 'நகர்ப்புற பசுமையாக்கல் திட்டம்' தொடங்கப்பட்டு, மரக்கன்றுகள் மற்றும் அலங்காரச் செடிகள் நடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள வளைவு சாலைப் பகுதியைச் சீர்படுத்தும் வகையில் அலங்காரச் செடிகள் நடும் பணியை, மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்ததாவது: "நாகர்கோவில் மாநகராட்சியை இயற்கை வளமிக்கப் பகுதியாக மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாநகராட்சியின் பிரதான சாலை ஓரங்கள், பூங்காக்கள், பொது இடங்கள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் ஏரிக்கரைகளில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு மரமாவது நட வேண்டும். நாகர்கோவிலை நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா நகராக மாற்றக் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இத்திட்டம் வெறும் அரசு திட்டமாக இல்லாமல் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார்.
'பசுமை நகரம்! தூய்மை நகரம்! நிலையான எதிர்காலம்!' என்ற இலக்கை அடைய நாகர்கோவில் மக்கள் அனைவரும் மாநகராட்சியுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


