» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்

செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)



குளச்சல் அருகே கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம் அடைந்தான். 

குமரி மாவட்டம், குளச்சல் அருகே ரீத்தாபுரத்தில் கரும்புச்சாறு கடை நடத்தி வருபவர் வில்லியம் போஸ். நேற்று (டிச.29) மாலை இவரது பேரன் ஆரின் ஜெப்ரின் (13) கரும்புச்சாறு இயந்திரத்தை சுத்தப்படுத்தும் போது அவனது வலது கை இயந்திரத்தில் சிக்கி விரல் நசுங்கியது. இதனால் அலறிய சிறுவன் மயங்கினான். 2 மணி நேர போராட்டத்துக்குப்பின் டாக்டர், மெக்கானிக், குளச்சல் தீயணைப்பு வீரர்கள் உதவிகளுடன் இயந்திரம் துண்டிக்கப்பட்டு விரல்கள் சிதைந்த நிலையில் சிறுவன் மீட்டப்பட்டான்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory