» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)
திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் கட்டும் பணி காரணமாக 10 தினங்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை மூலம் திங்கள்சந்தை- புதுக்கடை சாலை கி.மீ 11/10ல் திக்கணங்கோடு சந்திப்பில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் 79 வழியோர கடலோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் 500 மி.மீ விட்டமுள்ள குடிநீர் குழாய் மாற்றியமைக்க வேண்டியுள்ளதால் அந்த குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், தென்தாமரைக்குளம், கல்லுக்கூட்டம், மண்டைக்காடு, திங்கள்நகர், வெள்ளிமலை, கணபதிபுரம், புத்தளம் பேரூராட்சிகளுக்கும் மற்றும் கோவளம், லீபுரம், மகாராஜபுரம், பஞ்சலிங்கபுரம், முட்டம், ஆத்திக்காட்டுவிளை, தர்மபுரம், மணக்குடி, பள்ளம், இராஜாக்கமங்கலம், திக்கணங்கோடு ஆகிய ஊராட்சிகளுக்கும் 10 தினங்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது
சனி 13, செப்டம்பர் 2025 11:44:13 AM (IST)
