» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!

திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

ராஜாக்கமங்கலம் அருகே கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள சம்பக்குளத்தில் கடந்த 11ம் தேதி பச்சிளம் குழந்தை சடலமாக தலை இல்லாமல் மிதந்து வந்த வழக்கில், பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயான ஈத்தாமொழி புதூர் பகுதியை சேர்ந்த ரேகா(38) என்ற பெண்ணை  போலீசார் கைது செய்தனர்.

வாலிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் பிறந்ததால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது-இதனை தொடர்ந்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள்,இரண்டு மகள்கள் உள்ளதும், கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory