» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)



தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று கன்னியாகுமரியில் கனிமொழி எம்பி தலைமையில் திமுகவினர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. 

தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் "ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தின் கீழ் கழகத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பங்கள் பேரறிஞர் அண்ணா அவர்களது பிறந்த நாளான இன்று, "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்" என்ற தலைப்பில் கன்னியாகுமரியில் தீர்மானம் எடுக்கும் நிகழ்ச்சி கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்க்கு கனிமொழி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory