» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை மோசடி: 3 பேர் கைது

சனி 9, ஆகஸ்ட் 2025 11:49:11 AM (IST)

கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கிய விவகாரத்தில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கிய விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் 5வது குருக்குவீதி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வகுமார் (50), திண்டிவனம், சஞ்சிவி ராயன்பேட்டை பகுதியை சேர்ந்த மக்தூம் இப்ராகிம் மகன் முகமது இஸ்மாயில்(51) மற்றும் திண்டிவனம், ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாபு(42) ஆகியோர் பணி ஆணை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் திண்டிவனம் சென்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போலி அரசு பணி ஆணைகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய போலி அரசு முத்திரைகள், கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory