» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பள்ளிகளில் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:08:56 AM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியதையொட்டி, முக்கலம்பாடு, சாஸ்தான்கோவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள்pல் பயில தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவ மாணவியர்கள் காலை உணவினை தவிர்த்து இன்னல் அடைவதை கருத்தில் கொண்டு அவர்களின் பசியாற்ற காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும் தமிழ்நாடு அரசால் திங்கள்கிழமை தோறும் பொங்கல், சாம்பார் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று புதிய கல்வியாண்டு தொடங்கியதையொட்டி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவிபெறும் 446 பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் 27009 மாணவ, மாணவியர்களுக்கு பொங்கல் சாம்பார் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து முக்கலம்பாடு ஆர்.சி. தொடக்கபள்ளி மற்றும் சாஸ்தான்கரை அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு தயாரிப்பதை பார்வையிட்டதோடு, உணவின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் இருப்பு பொருட்கள் தேவையான அளவு இருக்கிறதா என்றும், மாணவ மாணவியர்களுக்கு தட்டுபாடின்றி உணவுகள் வழங்கிட தலைமையாசிரியருக்கும் பணியாளர்களுக்கும், துறை சார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது என்றார்.
முன்னதாக புதிய கல்வியாண்டு தொடங்கியதையொட்டி முக்கலம்பாடு ஆர்.சி தொடக்கப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வரவேற்றார். ஆய்வில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!
வெள்ளி 6, ஜூன் 2025 8:53:22 AM (IST)

நகைக்காக சிறுவனை கொடூரமாக கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை : கணவருக்கு 3 வருடம் சிறை!!
வெள்ளி 6, ஜூன் 2025 8:46:33 AM (IST)

பேருந்து நிலையம், நவீன காய்கறி சந்தை கட்டுமான பணிகள் : அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:59:38 PM (IST)

மாணவர்கள் இருவரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி!
வியாழன் 5, ஜூன் 2025 11:50:04 AM (IST)

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்!
வியாழன் 5, ஜூன் 2025 10:35:47 AM (IST)

தடுப்பணையில் விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல்!
புதன் 4, ஜூன் 2025 4:34:37 PM (IST)
