» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 385 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 2, ஜூன் 2025 4:44:59 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 385 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தடுப்பணையில் விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல்!
புதன் 4, ஜூன் 2025 4:34:37 PM (IST)

குமரி கடலில் நச்சுப்பொருட்கள் கலக்கப்படவில்லை; மக்கள் அச்சப்பட தேவையில்லை : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 3, ஜூன் 2025 4:45:34 PM (IST)

தமிழகத்தில் வரும் தோ்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி: நயினாா் நாகேந்திரன் நம்பிக்கை
செவ்வாய் 3, ஜூன் 2025 12:40:15 PM (IST)

ரயில் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் : ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண் கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 12:32:22 PM (IST)

தடுப்பணையில் விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி
செவ்வாய் 3, ஜூன் 2025 12:20:08 PM (IST)

பள்ளிகளில் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:08:56 AM (IST)
