» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகராஜா கோவிலில் ரூ.3 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்!
வியாழன் 8, ஆகஸ்ட் 2024 4:31:16 PM (IST)
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.3 லட்சம் கிடைத்துள்ளது.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் 2 மாதங்களுக்குப் பின்பு இன்று 8ஆம் தேதி திறந்து திருக்கோவில்கள் இணை ஆணையர் பழனி குமார் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் 3 லட்சத்து 5478 ரூபாயும், 3.200 கிராம் தங்கம், 56 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளது.