» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேச்சிப்பாறை அணையிலிருந்து 1000 கனஅடி தண்ணீர் திறப்பு: ஆட்சியர் தகவல்

திங்கள் 8, ஏப்ரல் 2024 7:32:00 PM (IST)

பேச்சிப்பாறை அணையிலிருந்து மதகுகள் வழியாக 1000 கனஅடி தண்ணீர் இன்று திறந்து விடப்படவுள்ளது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்.
 
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (08.04.2024) வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கையில்-  கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியான குழித்துறை, மங்காடு, வைக்கலூர் மற்றும் பரக்காணி வழியாக கடலில் சென்றடையும்.

கடல் நீர் பரக்காணி உள்ளிட்ட ஆற்றுப்பகுதியில் உட்புகுவதால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராகவும், விவசாய தேவைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 
இதனை கருத்தில் கொண்டு உப்புநீரை கடலில் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பேச்சிப்பாறை அணையிலிருந்து சுமார் 1000 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக திறந்துவிட அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இன்று (08.04.2024) மாலை 6 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்படவுள்ளதால் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் குளிப்பவர்கள் மற்றும் கரையோர பகுதி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory