» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மூத்த குடிமக்கள் வீடுகளிலேயே தபால் வாக்குப்பதிவு: ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், ஆய்வு!

திங்கள் 8, ஏப்ரல் 2024 3:39:19 PM (IST)



85 வயதுக்கு மேற்ப்பட்ட மூத்த குடிமக்கள் வீடுகளிலேயே தபால் வாக்குப்பதிவு செலுத்தியதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடத்திட்டுவிளை – பண்டாரக்காடு பகுதியில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்குப்பதிவு செலுத்துவதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் 

"இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 39 கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 239 விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து தங்கள் வீடுகளிலேயே தபால் வாக்குப்பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட தகுதிபெற்ற வாக்காளர்களில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெறவுள்ள கன்னியாகுமரி பாராளுமன்றம் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக படிவம் 12D வழங்கப்பட்ட தகுதியான வாக்காளர்களில் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்களில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 1343, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 559, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 448, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 849, விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 510, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 273 என மொத்தம் 3982 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்களிக்க பதிவு செய்திருந்தார்கள்.

மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 725, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 293, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 388, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 548, விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 335, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 257 என மொத்தம் 2546 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்களிக்க பதிவு செய்திருந்தார்கள்.

மேலும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 8, 9 மற்றும் 10 தேதியும் தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்று (08.04.2024) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கல்குளம் வட்டம் 231 குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடத்திட்டுவிளை பாகம் 227, புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளி வாக்காளரான பண்டாரக்காட்டை சேர்ந்த ராமசாமி (78) மற்றும் அதே பகுதியை சார்ந்த 92 வயது பூர்த்தியடைந்த கார்லூயிஸ் ஆகியோர் தபால் வாக்களித்ததை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ஒவ்வொரு தினமும் பெறப்படும் தபால் வாக்குப்பதிவு பெட்டிகளை அந்ததந்த வட்டாட்சியர் அலுவலங்களிலும் பாதுகாப்பாக வைக்கபடும். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார். வாக்குப்பதிவின் போது உதவி தேர்தல் அலுவலர் கனகராஜ், கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் சாந்தி, கல்குளம் வட்டாட்சியர் முருகன், தேர்தல் அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory