» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு மின்தடை : அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதி!

சனி 6, ஏப்ரல் 2024 4:10:12 PM (IST)

கன்னியாகுமரி பேரூராட்சியில் தேர்தல் நேரத்தில் திட்டமிட்டே செய்யப்படும் மின்தடை தமிழக அரசுக்கு எதிராக சதி என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, "கன்னியாகுமரி பேரூராட்சி இரண்டாவது வார்டு பகுதிகளான சுவாமிநாதபுரம், (வாவிளை செல்லும் சாலை) மாதவபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை, காலை மாலை, இரவு என பல கட்டங்களாக நாள் ஒன்றிற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் ஏற்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் தனியார் தங்கும் விடுதிகள் அதிகம் உள்ள பகுதிகளில் எவ்வித தங்கு தடையும் இன்றி 24 மணி நேரமும் மின்சார  சேவை வழங்கிவரும் கன்னியாகுமரி மின் பகிர்வு அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இதுபோன்று குடியிருப்பு பகுதிகளுக்கு தற்போது தேர்தல் நேரத்தில் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக திட்டமிட்டே அடிக்கடி மின்தடையை ஏற்படுத்தி வருகின்றனர். 

இதனால் இப்பகுதி மக்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளதாகவும் தேர்தலில் இது எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory