» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேர்தல் எதிரொலி : மதுபானக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:09:23 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு ஏப்.17ம் தேதி  முதல் 19ம் தேதி வரை மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பாராளுமன்ற பொதுத்தேர்தல், 2024 மற்றும் 233, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை நடைபெறுவதை முன்னிட்டு 17.04.2024 –ம் தேதி காலை 10.00 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 19.04.2024 நள்ளிரவு வரையும் 

மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 04.06.2024 அன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் FL2, FL3, FL3A, FL4A உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என  தெரிவித்தார்.




மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory