» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி - தூத்துக்குடி சாலைப் பணியை உடனே துவக்குவேன் : பொன் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 5, ஏப்ரல் 2024 3:40:03 PM (IST)



கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை உள்ள சாலைப் பணியை உடனே துவக்குவேன் என்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் வாக்குறுதி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி 2024 தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று  வெளியிட்டார்.

1. தமிழ்நாடு அரசால் அனுமதி மறுக்கப்பட்டு வரும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கான மத்திய அரசின் நவோதயா பள்ளியை தமிழகத்தில் கொண்டுவர முன்பு நான் மேற்கொண்ட முயற்சியை மீண்டும் தொடர்ந்து கன்யாகுமரி மாவட்டத்தில் அப்பள்ளியை அமைப்பேன்.

2.கன்யாகுமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்திட முன்பு எடுத்த முயற்சியை தொடர்ந்து எடுத்து பல்கலைக்கழகம் கொண்டு வருவேன். நம் வீட்டு குழந்தைகளை கருவில் அளிக்கும் போதை பொருட்களை கன்யாகுமரி மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் ஒழிக்கும் முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெறுவேன்.

4.கன்யாகுமரி மாவட்ட இளைஞர்களை தொழில்துறையில் முன்னேற்றும் நோக்கத்துடன் 100 இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆர்வமான தொழிலை அவர்களையே தேர்வு செய்ய வைத்து அத்துறையில் அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளித்து அவர்கள் தொழில் துவங்க தேவையான License மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் பெற துணை நிற்பேன்.

5.இயற்கை வளம் மிக்க கன்யாகுமரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக அறிவித்து சுற்றுலா மேம்பாடு பணிகளை மேற்கொள்வேன்.

6.கன்யாகுமரி மாவட்ட மக்களின் கனவு திட்டங்களில் ஒன்றான விமான நிலையத்திற்காக முன்பு நான் அமைச்சராக இருந்த போது எடுத்த முயற்சிகளை மீண்டும் தொடர்ந்து, கன்யாகுமரி நிலையத்தை அமைப்பேன். விமான

7.சென்ற முறை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ரூ. 4000/- கோடியில் கொண்டு வரப்பட்ட கன்யாகுமரி மாவட்டத்தின் 40 ஆண்டு கனவான இரட்டை இரயில் பாதை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணி முடிந்ததும் சென்னை கன்யாகுமரி இடையே படுக்கை வசதியுடன் வந்தே பாரத் இரயிலும் மேலும் பல இரயில்களும் நாட்டின் மாநிலங்களுக்கும் தமிழ் நாட்டின் ஊர்களுக் நம் இயக்க நடவடிக்கை எடுப்பேன். பல பல

8.கன்யாகுமரியிலிருந்து திருச்செந்தூர் - தூத்துக்குடி வழியாக சென்னை வரைக்கும் கிழக்கு கடற்கரை இரயில் பாதை அமைப்பேன்.

9.என்னால் பணி துவங்கப்பட்ட நான்கு வழிச்சாலைக்கு தேவையான ன மண், மணல், ஜல்லி போன்ற மூலப்பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்காத காரணத்தால் கைவிடப்பட்ட நான்கு வழிச்சாலைப் பணியை மீண்டும் துவங்க மத்திய அரசிடம் இருந்து 1041 கோடி ரூபாய் பெற்று கொடுத்துள்ளேன்.

10.இந்த நான்கு வழிச்சாலை பணியை 2025 டிசம்பர் மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பேன் .

11.நான் முன்பு அமைச்சராக இருந்த போது மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளை சீரமைக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து சீரமைத்தது போன்று மீண்டும் சீரமைக்கப்படும்.

12.சென்ற முறை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது துவக்கப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பணிகள் முடிக்கப்படும். குறிப்பாக கன்யாகுமரி முதல் தூத்துக்குடி வரை உள்ள சாலைக்கு நிதி ஒதுக்கியும் செயல்படுத்த பல ஆண்டுகள் ஆகியும் துவக்கப்படாமல் இருக்கும் இந்த சாலைப் பணியை உடனே துவக்குவேன்.

13.சென்ற முறை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது முயற்சி எடுத்த விமான நிலையத்திற்கு இணையான நாகர்கோவில் நவீன பேருந்து நிலையம் அமைய பாடுபடுவேன்.

14.முதல்முறை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது என்னால் கொண்டு வரப்பெற்ற ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றி தமிழகத்தில் தலைசிறந்த அரசு மருத்துவமனையாக கொண்டு வருவேன்.

15.சென்ற முறை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது முயற்சி எடுத்த தொழிலாளர் களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனையை கொண்டு வருவேன்.

16.மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தடையற்ற குடிநீர் கிடைக்க உறுதியளிக்கிறேன் .

17.சென்ற முறை எம்.பி.யாக இருந்த போது கொண்டுவர முயற்சி செய்து கொண்டு வந்த தென்னை ஆராய்ச்சி மையத்தை முழுமையாக செயல்படும் வகையில் நடவடிக்கை எடுப்பேன்.

18.மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் தூர் வாரப்பட்டு நீரின் கொள்ளளவு அதிகரிக்கப்படும்.

19. மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவையான சாலை வசதி, மின்சார வசதி மற்றும் சுகாதார வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பேன்.

20. குமரி மாவட்ட மீனவர்களை பேரிடர்களில் இருந்து காக்கும் பொருட்டு ஹெலிகாப்டருடன் கூடிய ஹெலிகாப்டர் தளம் அமைப்பதுடன் மருத்துவ வசதி கொண்ட மீட்பு கப்பல், படகு போன்றவை கொண்டு வருவேன்.

21.தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை பாதுகாப்பான முறையில் அமைக்க தற்போதைய மீன்வள துறை மத்திய அமைச்சர்கள் திரு.ரூபாலா மற்றும் திரு. எல். முருகன் ஆகியோர் மூலம் முயன்றேன். அதனை தலைசிறந்த மீன்பிடி துறைமுகமாக மாற்றுவதோடு குறும்பனை, வாணியக்குடி பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதுடன் பல கடலோர பகுதிகளில் என்னால் முன்பு அமைக்கப்பட்ட கடலரிப்பு தடுப்பு சுவர்களை சீரமைப்பேன்.

22. ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதுடன் ரப்பர் சம்மந்தமான தொழிற்சாலை அமைக்க பாடுபடுவேன்.

23. பெண்களின் தொழில் முன்னேற்றத்திற்காக தனிகவனம் செலுத்தப்படும்.

24.நம் குடும்பப் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்களுக்கு Counseling போன்றவை தேவைப்படின் அதற்காகவும் மூன்று மையங்கள் நாகர்கோவில், தக்கலை மற்றும் மார்த்தாண்டத்தில் முதல் கட்டமாக அமைப்பதோடு அதனை திறன் மிக்க பெண்களைக் கொண்டே செயல்படுத்துவதுடன் பெண்களுக்கான அமைப்பாக செயல்பட ஊக்கம் கொடுப்பேன்.

25.தமிழர்களின் ஐந்து வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலையில் பாலை வன பகுதியை நீக்கி நான்கு வகை நிலங்கள் கொண்டு இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி நமது கன்யாகுமரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் கனிம வளங்களை காரணம் இன்றி அழித்து கொள்ளையடித்து சம்பாதித்து வரும் சில அரசியல்வாதிகளின் கொலை வெறி குணத்தை முடிவிற்கு கொண்டு வந்து கனிம காக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory