» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

புதன் 7, பிப்ரவரி 2024 12:08:35 PM (IST)

குமரி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர்(பி.வ.) மிகப் பிற்படுத்தப்பட்டோர்(மிபிவ) மற்றும் சீர்மரபினர்(சீம) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்களை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபிவ/சீம மாணவ,மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பாண்டில் புதியது மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login-இல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும்.

கல்வி உதவித்தொகை இணையதளம்(Scholarship Portal) புதியதிற்கு(Fresh) 01.02.2024 முதல் செயல்பட துவங்கும். புதியதிற்கான விண்ணப்பங்கள் மாணவ, மாணவியர்கள் 29.02.2024-க்குள் இணையதளம் மூலம் சமர்பிக்கப்பட வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அனுகவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory