» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பணி நேரத்தில் மது அருந்திய சுகாதாரத்துறை பணியாளர்கள்? விசாரணை நடத்த கோரிக்கை!

செவ்வாய் 6, பிப்ரவரி 2024 12:05:10 PM (IST)



வடசேரியில் பணி நேரத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மது அருந்தியது தொடர்பான வீடியோ குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி மில் அமைந்துள்ள பொது சுகாதாரத்துறை அலுவலக சுகாதார பணியாளர்கள் பட்டபகலில் வடசேரி பேருந்து நிலையம் அருகே டாஸ்மார்க் கடையில் இருந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. விடுமுறை நாளில் ஒன்றுகூடி மருந்து அருந்தினார்களா அல்லது விடுமுறை நாளில் மது அருந்தினார்களா என மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இவர்கள் டாஸ்மார்க் கடைக்கு பனி நேரத்தில் சென்றார்களா? அல்லது விடுமுறை நாளில் சென்றார்களா? என்பது முக்கியமல்ல அரசின் மருத்துவ திட்டங்களையும் மக்களை பாதுகாக்க வேண்டிய மருத்துவ உதவிகளையும் அந்தந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று செய்யும் புனிதமான சேவையை செய்து வரும் இவர்களை பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளில் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory