» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் ரூ.12 கோடியில் சாலைப் பணிகள் : அமைச்சர் துவக்கி வைத்தார்!

வெள்ளி 2, பிப்ரவரி 2024 5:53:54 PM (IST)



குமரி மாவட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான சாலைப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், துவங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (02.02.2024) துவக்கி வைத்து தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணியினை துவக்கி வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் ரூ.48 இலட்சம் மதிப்பில் ஐரேனிபுரம் - நட்டாலம் வரையுள்ள சாலை சீரமைக்கும் பணிகள், ரூ.62 இலட்சம் மதிப்பில் ஐரேனிபுரம் – விரிகோடு சாலைப்பணிகள், ரூ.5.3 கோடி மதிப்பில் குழித்துறை முதல் ஆலஞ்சோலை வழியாக அருமனை செல்லும் பகுதியில் உள்ள சாலை பணிகள், ரூ.95 இலட்சம் மதிப்பில் மருதங்கோடு சாலைப்பணிகள், ரூ.4.9 கோடி மதிப்பில் மார்த்தாண்டம் முதல் பனிச்சமூடு வரையிலான சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.12.25 கோடி மதிப்பிலான சாலைப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் கன்னியாகுமரி மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை திருக்கோவில்களின் தலைவர் ராஜன், குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைதம்பி, மரிய சிசு குமார், ராஜேஷ் குமார், பினுகுமார், அருளானந்தம், லிஜேஸ் ஜுவன், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory