» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பஞ்., பெண் தலைவர் வீடு மீது கல்வீசி தாக்குதல் : 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை!

ஞாயிறு 24, அக்டோபர் 2021 5:55:59 PM (IST)செங்கோட்டை அருகே பஞ்சாயத்து பெண் தலைவர் வீடு மீது சரமாரியாக கல்வீசி தாக்கிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை யூனியன் தெற்குமேடு பஞ்சாயத்து தலைவராக பட்டதாரி இளம்பெண் அனு (22) வெற்றி பெற்று பதவியேற்றார். இவருடைய தந்தை கண்ணன். தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். நள்ளிரவில் சுமார் 5 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென்று அனுவின் வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர்.

இதில் வீட்டின் முன்பக்க ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி சேதமடைந்தன. உடனே வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து உடனடியாக புளியரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் அனு அளித்த புகாரில், தேர்தல் முன்விரோதம் காரணமாக தனது வீட்டில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கியிருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஞ்சாயத்து தலைவரின் வீட்டில் கல்வீசிய 5 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory