» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் தொடர் கனமழை: 2 பேர் பலி; 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது
ஞாயிறு 17, அக்டோபர் 2021 9:57:53 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால், 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழைக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழையை முன்னிட்டு கடந்த 15 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. எனினும், கடந்த 14ந்தேதி இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மழைநீர் நிரம்பி வெள்ள காடாக உள்ளது. கன்னியாகுமரியின் நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.71 அடியாக உயர்ந்து உள்ளது.
பேச்சிப்பாறை, குற்றியாறு, கடையாலுமூடு, களியல் உட்பட குமரி மலை கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
மழையால் தோவாளை பகுதியில் இறுதிக்கட்ட அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. குமரி மாவட்டத்தில் மழைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட ஒருவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால், 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கிருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் கொள்ளை - போலீஸ் விசாரணை
புதன் 31, டிசம்பர் 2025 11:46:12 AM (IST)

அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்டு வரட்டும் : விஜய் வசந்த் எம்.பி புத்தாண்டு வாழ்த்து!
புதன் 31, டிசம்பர் 2025 11:33:44 AM (IST)

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)



.gif)