» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு

சனி 23, ஜனவரி 2021 3:55:00 PM (IST)நாகர்கோவிலில்,  நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜிீத் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தேசிய வாக்காளர் தினம் 25ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது.

மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்நிலையில் நாகர்கோவிலில் இன்று மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி செட்டிகுளம் வழியாக வேப்பமூடு சந்திப்பு வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. சைக்கிள் பேரணியில் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி ஆகியோர் சைக்கிள் ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணியில் நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர், ஜவான்ஸ் அமைப்பினர் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.பேரணியின்போது வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பதாகைகளை சைக்கிளில் ஏந்தியவாறு சென்றனர். வாக்காளர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பதைத் தங்களது முதல் கடமையாக கொள்ள வேண்டும். தங்களின் வாக்குரிமையை யாரும், எதற்காகவும் விட்டு கொடுக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வலியுறுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory